படுக்கையில் தீப்பிடித்து தொழிலாளி உடல் கருகி பலி

ஊட்டி அருகே மதுபோதையில் அணைக்காமல் வீசிய சிகரெட்டால் படுக்கையில் தீப்பிடித்து தொழிலாளி உடல் கருகி பலியானார்.;

Update:2023-07-20 02:00 IST

ஊட்டி

ஊட்டி அருகே மதுபோதையில் அணைக்காமல் வீசிய சிகரெட்டால் படுக்கையில் தீப்பிடித்து தொழிலாளி உடல் கருகி பலியானார்.

ெதாழிலாளி

ஊட்டி அருகே உள்ள காந்தல் மேல்போகி தெருவை சேர்ந்தவர் சிவராஜ்(வயது 39). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான சிவராஜ், தினமும் போதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் கோபித்துக்கொண்ட அவரது மனைவி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கேரளாவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிவராஜ் தனியாக வசித்து வந்தார்.

தீயில் கருகி...

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. மேலும் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது படுக்கை அறையில் சிவராஜ் தீயில் கருகி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சிகரெட் துண்டு

இதுகுறித்த தகவலின் பேரில் ஊட்டி மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனா பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் நிசாந்தினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது மதுபோதையில் சிகரெட் துண்டை அணைக்காமல் கீழே வீசியதால், படுக்கையில் தீப்பிடித்து, தூங்கி கொண்டு இருந்த சிவராஜ் உடல் கருகி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனினும் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்