மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

Update: 2022-12-20 18:35 GMT

மரக்கிளைகளை வெட்டினார்

பெரம்பலூரில் உள்ள கம்பன் தெருவை சேர்ந்தவர் தங்கைய்யா(வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு ராமு மற்றும் மலர் என 2 மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் சிலம்பரசன், சேலம் மாவட்டம் கருமந்துறையில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தங்கைய்யா நேற்று பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரம் பகுதியில் ரோவர் சாலையில் உள்ள ஆரோக்கிய நகரை சேர்ந்த பீட்டர்ராஜ் என்பவரது தோட்டத்தில் தாறுமாறாக வளர்ந்திருந்த தேக்கு மரக்கிளைகளை வெட்டி கழித்து ஒழுங்குபடுத்தும் வேலையில் ஈடுபட்டார். வீட்டின் மாடியில் நின்றவாறு மரக்கிளைகளை வெட்டியபோது திடீரென தவறி அவர் கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சாவு

இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல், மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்