காரியாபட்டி பேரூராட்சியில் புதிய மின்கம்பங்கள் நடும் பணி தொடக்கம்

காரியாபட்டி பேரூராட்சியில் புதிய மின்கம்பங்கள் நடும் பணி தொடங்கியது. இங்கு 450 தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-04-27 20:27 GMT

காரியாபட்டி

காரியாபட்டி பேரூராட்சியில் புதிய மின்கம்பங்கள் நடும் பணி தொடங்கியது. இங்கு 450 தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது.

விரிவாக்கப்பட்ட பகுதி

காரியாபட்டி பேரூராட்சியை சேர்ந்த எழில் நகர், என்.ஜி.ஓ. நகர், ஆசிரியர் காலனி, பள்ளத்துப்பட்டி, ஓம்சக்தி நகர் மற்றும் பல்வேறு விரிவாக்கப்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு இல்லாமல் இருந்தது. இந்த பகுதியில் தற்போது அதிக அளவில் வீடுகள் உருவாகி வருகிறது. இந்த பகுதி விரிவாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் இரவு நேரங்களில் வீடுகளில் திருட்டு அதிகமாக நடைபெற்று வந்தது.

இந்த பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

மின்கம்பங்கள் நடும் பணி

ஆதலால் மேற்கண்ட பகுதிகளில் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என அமைச்சர் தங்கம்தென்னரசுவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ரூ. 1 கோடி மதிப்பில் 450 தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது முதல் கட்டமாக மின்கம்பங்கள் நடும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஸ்ரீ ரவிக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்