மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் -ஜி.கே.வாசன் வேண்டுகோள்

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மாநகராட்சிக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்.;

Update:2022-08-17 00:34 IST

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், மழைநீர் தேங்கும் இடங்களில் வடிகால் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் மந்தமாக நகர்வதை பார்த்தால் வடகிழக்கு பருவமழை தொடங்கி முடிந்துவிடும் போல் இருக்கிறது. மேலும் இதனால் ஏற்கனவே இருந்த பாதிப்பை விட மிக அதிகமான பாதிப்பாக தான் இருக்கும்.

கே.கே.நகர், அசோக்நகர், நெசப்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறாமல் பல இடங்களில் துண்டு, துண்டாக பணி நிற்கிறது. இதனால் அங்கு குடியிருப்போரும், சாலையில் பயணிப்போரும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். ஆகவே பெருநகர சென்னை மாநகராட்சி விரைவில் பணிகளை இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து விரைவாகவும், முழுமையாகவும் முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்