பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-26 18:30 GMT

அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த மதியழகனின் மனைவி ராணி (வயது 43). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் ராஜேசுக்கும் (21) இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து உள்ளது. கடந்த 24-ந் தேதி ராணி தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது ராஜேஷ் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ராணி மற்றும் அவரது கணவர், மகன் வெளியே வந்து எதற்கு பிரச்சினை செய்கிறாய் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து ராஜேஷ், அவரது தந்தை கோவிந்தராஜ் (52), தாயார் கீதா (42) தம்பி சந்தோஷ் (17) ஆகிய 4 பேரும் சேர்ந்து ராணி மற்றும் அவரது கணவர், மகன் ஆகிய 3 பேரையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராணி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில் கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ராஜேஷ், கீதா, சந்தோஷ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்