தீயில் கருகி பெண் பலி

தீயில் கருகி பெண் பலியானார்.

Update: 2022-12-20 19:28 GMT


திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர் பாலம்மாள் (வயது 53). இவர் வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவரது உடையில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. தீ உடல் முழுவதும் பரவியதால் பலத்த தீக்காயம் அடைந்த பாலம்மாள் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்