சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு

மதுரையில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் காரியாபட்டியை சேர்ந்த தொழிலாளி இறந்தார்.

Update: 2022-06-25 20:08 GMT

மதுரையில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் காரியாபட்டியை சேர்ந்த தொழிலாளி இறந்தார்.

கட்டிடம் இடிந்து விழுந்தது

மதுரை விரகனூர் ரிங்ரோடு சந்திப்பு, அருப்புக்கோட்டை சாலையில் விவேக் என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டி வருகிறார். அதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கட்டுமான பணியின் போது திடீரென கட்டிடத்தின் சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

அப்போது அங்கு பணியில் இருந்த கட்டிட தொழிலாளியான விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள அரசங்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இடிபாடுக்குள் சிக்கினார். அவரை மீட்க தொழிலாளர்கள் முயற்சி செய்து பலன் அளிக்கவில்லை. உடனே இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தொழிலாளி சாவு

தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி இறந்த நிலையில் ஆறுமுகத்தின் உடலை மீட்டனர். பின்னர் சிலைமான் போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கட்டிட உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் நீர்நிலைப்பகுதியில் கட்டுமான பணிகள் நடப்பதாக ஏற்கனவே புகார் எழுந்ததாகவும், அதை மீறி தொடர்ந்து கட்டிட பணிகள் நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்