மின்கம்பியை சூழ்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும்

கொள்ளிடத்தில் மின்கம்பியை சூழ்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-10-08 00:15 IST

கொள்ளிடம்:

கொள்ளிடம் கடைவீதியிலிருந்து ஆச்சாள்புரம், ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையிலிருந்து கொள்ளிடம் அக்ரஹார தெருவுக்கு மின் கம்பங்கள் மூலம் மின் கம்பிகள் செல்கின்றன. இதில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்து மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை முழுமையாக மூடி மறைத்துள்ளன. இதன் வழியே அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்சாரம் சென்று கொண்டிருக்கின்றன. தாழ்வாக செல்லும் மின்கம்பியில் கொடிகள் படர்ந்துள்ளதால் மழை நேரங்களில் கம்பிகளிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் கொடிகள் வழியே மின்சாரம் பாய்ந்து சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மின்சாரம் தாக்கும் அபாய நிலை உள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படவும், தீவிபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மின் கம்பிகளை அடர்ந்து சூழ்ந்து மூடி மறைத்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்