மனு வாங்க மறுத்ததால் கிராமமக்கள் தர்ணா

மனு வாங்க மறுத்ததால் கிராமமக்கள் தர்ணா

Update: 2023-01-26 20:15 GMT

அம்மாப்பேட்டை ஒன்றியம் செருமாக்கநல்லூர் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. அப்போது அதே ஊராட்சியை சேர்ந்த மகேந்திரன் மற்றும் சிலர் மனு கொடுக்க வந்தனர். ஆனால் மனு வாங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சிலர் ஊராட்சி மன்ற அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கை மனுவை வாங்க மறுத்ததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகிற 2-ந்தேதி போராட்டம் நடத்தபோவதாக கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்