அனுமதி இன்றி கூழாங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

அனுமதி இன்றி கூழாங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2022-09-08 22:55 IST

ஜெயங்கொண்டம் அருகே வடவீக்கம் கிராமத்தில் திருச்சி மண்டல உதவி புவியியலார் பறக்கும் படை நாகராஜன் என்பவர் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அனுமதியின்றி கூழாங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்