ஏர் ஓட்டும் போது டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
ஆரணி அருகே ஏர் ஓட்டும் போது டிராக்டர் கவிழ்ந்து டிரைவா் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் கண்ணன் (வயது 34), டிராக்டர் டிரைவர். இவர், நேற்று அதே கிராமத்தில் நாராயணன் என்பவரின் நிலத்தில் டிராக்டரில் ஏர் ஓட்டினார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.