டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
கடையநல்லூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
கடையநல்லூர்:
தேனி மாவட்டம் பேரையூர் அருகே உள்ள உத்தப்புரம் வ.உ.சி. நகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவருடைய மகன் வேல்முருகன் (வயது 48). நேற்று முன்தினம் வடகரையில் இருந்து கடையநல்லூரை நோக்கி டிராக்டரை ஓட்டி வந்தார். காசிதர்மம் அருகே வளைவில் டிராக்டரை திருப்பும்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள ஓடைக்குள் டிராக்டர் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி கொண்ட வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் இலத்தூர் போலீசார் விரைந்து சென்று வேல்முருகனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.