மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல்

தேனி அருகே மணல் அள்ளி வந்த டிராக்டரை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

Update: 2022-07-11 14:51 GMT

தேனி அருகே பள்ளப்பட்டியில் இருந்து அய்யனார்புரம் செல்லும் சாலையில் கனிமவளத்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டரை ஓட்டி வந்தவர், அதிகாரிகள் வரும் வாகனத்தை பார்த்ததும் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். அந்த டிராக்டரில் 1 யூனிட் ஆற்று மணல் இருந்தது.

அருகில் உள்ள வைகை ஆற்றில் இருந்து மணலை கடத்தி வந்து இருக்கலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர், உரிமையாளர் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்