மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்

ஆரணி அருகே மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல் ெசய்யப்பட்டது.

Update: 2023-06-29 10:11 GMT

ஆரணி

ஆரணி பகுதியில் உள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் திருட்டு நடப்பதாக ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமிக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து தாசில்தார் ரா.மஞ்சுளா தலைமையில் வருவாய் துறையினர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆரணி - முள்ளண்டிரம் சாலையில் நேற்று  இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அத்தியூர் ஏரியிலிருந்து மணல் கடத்திக்கொண்டு ஒரு டிப்பர் லாரி வந்தது. அதிகாரிகளை பார்த்தும் டிரைவர் டிப்பர் லாரியை ரோட்டிலேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தாசில்தார் ரா.மஞ்சுளா புகார் அளித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் விசாரணை நடத்தினார்.

அதில் லாரியின் உரிமையாளர் ஆலந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து லாரியின் உரிமையாளர், தப்பி ஓடிய டிரைவர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்