கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஆடிட்டர் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-06-27 20:23 GMT
தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 45). ஆடிட்டர். இவர் தனது வீட்டுக்கு அருகே உள்ள பண்ணையில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் திடீரென பண்ணைக்குள் புகுந்து மகேஸ்வரனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கரந்தை ஆனந்தம ்நகர் 2-வது தெருவை சேர்ந்த பாண்டி சுரேஷ் என்பவரின் மகன் அரவிந்த் (27), தஞ்சை கரந்தை சிவராமன்பிள்ளை சந்து சேர்வைக்காரன் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திகேயன் (வயது32), கரந்தை செல்லியம்மன்கோவில் தெருவை சேர்ந்த பாபு மகன் மணிகண்டன் (29), கரந்தை அரிக்காரத்தெருவை சேர்ந்த பாலு மகன் குமரேசன் (26) ஆகியோரை கைது செய்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

பின்னர் இவர்கள் தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் அரவிந்த் மீது ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்திகேயன், மணிகண்டன், குமரேசன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின்பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.

இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து கார்த்திகேயன், மணிகண்டன், குமரேசன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் தஞ்சை மேற்கு போலீசார் சமர்ப்பித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்