போதை மாத்திரை விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
போதை மாத்திரை விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
பொன்மலைப்பட்டி:
அரியமங்கலம் காமராஜர் நகர் அப்துல்கலாம் ஆசாத்தெருவை சேர்ந்த அம்ருதீன், சாகுல் ஹமீது, முகமது சித்திக் ஆகிய 3 பேரையும், போதை மாத்திரை விற்றது தொடர்பாக அரியமங்கலம் போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அம்ருதீனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய பொன்மலை உதவி கமிஷன் காமராஜ், திருச்சி மாநகர கமிஷனர் சத்தியபிரியாவிற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சத்தியப்பிரியா, அம்ருதீனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிறையில் உள்ள அம்ருதீனிடம் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவனந்தம் வழங்கினார்.