வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-15 21:14 GMT

ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூரைச் சேர்ந்தவர் காசிராஜன் (வயது 40). இவர் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டதாக பாப்பாக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

இதனை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று காசிராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்