திண்டிவனம் அருகேவிவசாயி வீட்டில் நகை பணம் திருட்டு
திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருடு போனது.;
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த பாமுண்டி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 51). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்துக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.