மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி பிரமுகரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
நெல்லையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி பிரமுகரின் மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.;
நெல்லை டவுன் செண்பகம் பிள்ளை மேற்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் சுந்தர்ராஜ் (வயது 36). இவர் நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாவட்ட செயலாளராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அவர் நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.