மின்மோட்டார் திருடிய வாலிபர் ைகது
மின்மோட்டார் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் தர்மர் (வயது58). இவருக்கு பிளவக்கல் அணைக்கு செல்லும் சாலையில் தென்னந்தோப்பு உள்ளது. இவர் தோட்டத்தில் உள்ள அறையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது அறையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது மின்மோட்டார், வயர், பேட்டரி உள்பட பல்வேறு பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தர்மர் அளித்த புகாரின் பேரில் கூமாபட்டி போலீசார், ராஜா (25) என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை தேடி வருகின்றனர்.