தீக்குளித்து வாலிபர் தற்ெகாலை

தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து ெகாண்டார்.

Update: 2023-03-12 19:46 GMT

திருச்சுழி, 

திருச்சுழி பசுமடத்தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 34). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இவா் திடீரென வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்