வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

நெல்லையில் இரவில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மோட்டார்சைக்கிளில் சென்றவரை கும்பல் வழிமறித்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது

Update: 2022-11-21 20:36 GMT

பேட்டை:

நெல்லையில் இரவில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மோட்டார்சைக்கிளில் சென்றவரை கும்பல் வழிமறித்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது.

வாலிபர்

நெல்லை அருகே பேட்டையை அடுத்த நடுக்கல்லூரை சேர்ந்த குமாரவேல் மகன் நம்பி (வயது 30). இவர் பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று இரவு இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் பின்தொடர்ந்து வந்தனர்.

வெட்டிக்கொலை

பேட்டை தொழிற்பேட்டை வளாகத்தில் வந்தபோது 4 பேருக்கும் மேற்பட்ட கும்பல் நம்பியை வழிமறித்தனர். பின்னர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர மேற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் மற்றும் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மோப்பநாய் உதவியுடன் கொலையாளிகளை தேடினர்.

கர்ப்பிணி மனைவி கதறல்

நம்பி தீபாவளிக்கு பிறகுதான் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருடைய மனைவி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவர் உடலை பார்த்து மனைவி கதறி அழுதார்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த பயங்கர கொலை சம்பவம் பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்