வாலிபர் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-20 19:00 GMT

தூத்துக்குடி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முத்தையாபுரம் அருகே உள்ள முள்ளக்காடு, ராஜீவ்நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் முள்ளக்காடு தேவிநகரை சேர்ந்த கணேசன் மகன் ரமேஷ் (வயது 29) என்பதும், அவர் அப்பகுதியில் ஒருவரிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் ரமேசை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்