பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது

ஓமலூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-11-09 01:44 IST

ஓமலூர்

ஓமலூர் அருகே கொங்குப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி கடந்த 6-ந் தேதி திடீரென மாயமானார் இது குறித்து அவரது தாயார் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகளை கொங்குப்பட்டி நல்லூர் முனியப்பன் கோவில் காடு பகுதியை சேர்ந்த முனியன் என்பவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 21) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக தெரிவித்து இருந்தார். இதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மாணவியை மீட்டு சேலத்தில் உள்ள காப்பகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்