விழுப்புரம் கோர்ட்டு முன்புவாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

விழுப்புரம் கோர்ட்டு முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-04 18:45 GMT


சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35). இவர் நேற்று மதியம் 2 மணியளவில் விழுப்புரம் நீதிமன்ற வளாகம் முன்பு வந்தார். அப்போது அவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை திறந்து அதிலிருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடன் அங்கிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் புதுச்சேரி மாநிலம் திருக்கனூரில் உள்ள கல்குவாரியில் வேலை செய்து வருவதும், இவர் மீது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல இடங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், குடிபோதையில் அவர் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து சந்திரசேகரை, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்