கிணற்றை மீட்க கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தி வாலிபரால் பரபரப்பு

தாரமங்கலம் அருகே கிணற்றை மீட்க கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-09-02 20:03 IST

தாரமங்கலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள ஆயா மரத்தூரில் பழைய வட்டகிணறு ஒன்று இருந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிலர் இந்த கிணற்றை ஆக்கிரமித்து மண்ணை கொட்டி மூடியதாக கூறப்படுகின்றது.

இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கிணற்றை மீட்க பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கிணற்றை மீட்க கோரி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து அப்பகுதிமக்கள் தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை பத்திரமாக மீட்டனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சத்தியராஜ் (32)நெசவு தொழிலாளி என்பது தெரியவந்துள்ளது. தற்போது சத்தியராஜை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்