ரூ.10 ஆயிரத்தை வங்கியில் ஒப்படைத்த ஆசிரியர்

Update: 2023-06-28 18:45 GMT

தர்மபுரி குமாரசாமிப்பேட்டையை சேர்ந்தவர் மாசானம் (வயது 50). அரசு பள்ளி ஆசிரியர். இவர் அந்த பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்குள்ள எந்திரத்தில் ரூபாய் நோட்டுகள் கொத்தாக வெளியே நீட்டி கொண்டிருந்தது. கேட்பாரற்று கிடந்த அந்த பணத்தை எடுத்து எண்ணிய போது ரூ.9,900 இருந்தது. இந்த பணத்தை மாசானம் வங்கியில் ஒப்படைத்தார். அந்த பணம் யாருடையது என்று வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அப்போது குமாரசாமிப்பேட்டையை சேர்ந்த ஒரு பெண் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க காத்திருந்தபோது தாமதமானதால் அங்கிருந்து சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உரிய விசாரணைக்கு பின் அந்த பெண்ணிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. ஏ.டி.எம். மையத்தில் கிடைத்த பணத்தை ஒப்படைத்த ஆசிரியர் மாசானத்திற்கு வங்கியின் முதன்மை மேலாளர் தமிழரசு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்