வனவிலங்குகளின் தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி

கண்டமனூர் அய்யனார்கோவில் மலைப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2022-05-22 17:25 GMT

கடமலைக்குண்டு:

கடமலைக்குண்டு அருகே கண்டமனூர் வன சரகத்திற்கு உட்பட்ட அய்யனார்கோவில் மலைப்பகுதியில் மான், செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு பகுதியில் மழை அளவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மலைப்பகுதியில் உள்ள சிறு ஓடைகள் மற்றும் குளங்கள் முற்றிலுமாக வற்றியது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம்பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் கண்டமனூர் வன சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் அய்யனார்கோவில் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வனவிலங்குகள் தண்ணீர் தொட்டிக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் தொட்டியை சுற்றி ஆக்கிரமித்துள்ள முட்செடிகளை வெட்டி அகற்ற வேண்டும் எனறும், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபட்டு தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்றும் வனசரகர் ஆறுமுகம், வனத்துறை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்