கோடை மழையால் பருத்திகள் கருகின

வாசுதேவநல்லூர் அருகே கோடை மழையால் பருத்திகள் கருகின.

Update: 2023-05-11 19:00 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்துவழி கிராமத்துக்கு மேற்கே தலையணை செல்லும் பகுதியில் திருமலாபுரம் வ.உ.சி. கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜீவராஜ் (வயது 49) என்பவரது வயல் உள்ளது. இங்கு சுமார் 6 ஏக்கரில் பருத்தி பயிரிட்டு இருந்தார். ஆனால் சமீபத்தில் பெய்த கோடை மழையால் பருத்தி கருகி நாசமானது.

இதுகுறித்து ஜீவராஜ் கூறுகையில், கடந்த பிப்ரவரி மாதம் ராசி வகை பருத்தியை பயிரிட்டு வளர்த்து வந்தேன். இந்த பருத்தியானது 6 மாதம் விளைச்சலில் மகசூல் தரும் பருத்தி வகையைச் சேர்ந்தது. தற்போது 3 மாத காலமாக வளர்ந்து வந்த நிலையில் பருத்தி வெடித்து வரும் சமயத்தில் கடந்த வாரம் பெய்த கோடை மழை காரணமாக வயல் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் பருத்தி செடி மற்றும் இலை, காய்ப்பகுதி காய்கள் அனைத்தும் கருகியது. இதனால் ரூ.6 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பருத்திகளை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க கேட்டுக் கொள்கிறேன்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்