தேசிய அளவிலான பேட்டியில் வெற்றி பெற்று கரூர் திரும்பிய மாணவர்களுக்கு ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தேசிய அளவிலான பேட்டியில் வெற்றி பெற்று கரூர் திரும்பிய மாணவர்களுக்கு ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-02-02 18:30 GMT

யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் அரியானா மாநிலத்தில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அணி சார்பில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாரதம் மார்சியல் ஆர்ட்ஸ் சிலம்பம் அகாடமியை சேர்ந்த விக்னேஸ்வர், நவலடி, விமல், பிரனேஷ்வரன், குமரேசன் ஆகிய 5 பள்ளி மாணவர்கள் பயிற்சியாளர் சவுந்தராஜ் தலைமையில் அங்கு ெசன்று சிலம்பம் விளையாடி தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் பெற்றனர். வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவர்களுக்கு கரூர் ெரயில் நிலையத்தில் சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் கிருஷ்ணராஜ், சவுந்தரராஜ், பெற்றோர்கள், உறவினர்கள் உடனிருந்தனர்.

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் 108 பேர் கலந்து கொண்டனர். இதில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழ்நாடு அணி பெற்றது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.இவர்கள் ஏப்ரல் மாதம் இறுதியில், நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். மேலும், மத்திய அரசு பணியில் சேர்வதற்கான படிவம்-2 சான்றிதழும் தற்போது முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கிடைத்துள்ளது என பயிற்சியாளர் சவுந்தரராஜ் தெரிவித்தார். கிரிக்கெட் போன்ற அயல்நாட்டு விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப்போல பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உள்ளிட்டவைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து நிதி உதவி அளித்தால் உதவியாக இருக்கும் என்று வெற்றி பெற்ற மாணவர்கள் தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்