களிமண்ணில் உருவங்கள் செய்து மாணவர்கள் அசத்தல்

ஒன்றிய அளவிலான கலைத்திருவிழாவில் களிமண்ணில் உருவங்கள் செய்து மாணவர்கள் அசத்தினர்.

Update: 2022-11-29 18:45 GMT

பொள்ளாச்சி

மாணவ-மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கலைத்திருவிழா பள்ளிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் வெற்ற பெற்ற மாணவ-மாணவிகள் ஒன்றிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தெற்கு ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது.


ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். 6 முதல் 8-ம் வகுப்பு வரையும், 9, 10-ம் வகுப்புகள் மற்றும் 11, 12-ம் வகுப்புகள் என போட்டிகள் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன. மொழித்திறன், கவின் கலை நுண் கலை, கருவி இசை, இசை, நாடகம், நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. அரசு பள்ளி மாணவர்கள் களிமண்ணால் விநாயகர் உள்ளிட்ட உருவங்களை செய்து அசத்தினர். மேலும் மணலால் முருகன் உருவத்தை தத்ரூபமாக செய்து இருந்தனர். ஒன்றிய அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று கல்வி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்