மலைவாழ் மக்கள் மலையில் குடியேறும் போராட்டம்

மலைவாழ் மக்கள் மலையில் குடியேறும் போராட்டம் நடந்தது.

Update: 2023-08-10 00:23 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை ராம்நகர் மலைவாழ் குடியிருப்பு பகுதியில் 80 மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலைப்பகுதியில் தங்களது மாடுகளை மேய்ப்பதற்கு வனத்துறை அனுமதிப்பதில்லை. சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்லக்கூடிய விசேஷ நாட்களிலும், ஆடி அமாவாசை போன்ற திருவிழா நாட்களிலும் கோவிலுக்கு செல்லும் வழியில் கடை வைப்பதற்கு கூட அனுமதி தராமல் வனத்துறை பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து மலைவாழ் மக்கள் மலைப்பகுதிக்கு நேற்று குடியேற சென்றனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை அவர்கள் அங்கிருந்து வர மாட்ேடாம் என கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்