பேரூராட்சி அலுவலகத்தில் பாம்பு பிடிபட்டது

ஆலங்காயம் பேரூராட்சி அலுவலகத்தில் பாம்பு பிடிபட்டது.;

Update:2023-10-02 23:35 IST

ஆலங்காயம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பாம்பு நடமாடி வந்துள்ளது. நேற்று அலுவலக வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் பாம்பு இருப்பதை பார்த்து ஆலங்காயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அலுவலக வளாகத்தில் பாம்பு பிடிபட்டது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்