புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்
காரைக்குடி செக்காலைப் பகுதியில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் அபிராஜ் (வயது 28). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கணேசபுரம், வைத்தியலிங்கபுரம் ஆகிய பகுதியில் பதுக்கி வைத்திருந்ததாக காரைக்குடி தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் சோதனை நடத்திய போலீசார் 86 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அபிராஜை கைது செய்தனர். மேலும் சந்தைப்பேட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை செல்போன் மூலம் விற்பனை செய்து வந்த செந்தில்குமார் (46) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.42 ஆயிரத்து 850-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.