பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது
பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார், விழுப்புரம் காந்தி சிலை அருகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்கிற பொருள் வினோத் (வயது 29) என்ற ரவுடி உருட்டுக்கட்டையுடன் நின்றுகொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு அவ்வழியாக சென்ற பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார். உடனே வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.