தீயில் எரிந்து கூரை வீடு நாசம்

தீயில் எரிந்து கூரை வீடு நாசம்

Update: 2022-11-04 18:45 GMT

ஆக்கூர் ஊராட்சிக்குட்பட்ட பண்டாரவாடை கீழத்தெருவை சேர்ந்தவர் காயத்ரி. இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். காயத்ரி தனது குழந்தைகளுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் காயத்ரி சமைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, சான்றிதழ்கள் எரிந்து சாம்பலாகின. தகவல் அறிந்த தரங்கம்பாடி தாசில்தார் புனிதா சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட காயத்ரி குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் சேலை, அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்