தீயில் எரிந்து கூரை வீடு நாசம்

திருமருகலில் தீயில் எரிந்து கூரை வீடு நாசம் அடைந்தது.

Update: 2023-07-24 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது 52).இவர் விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தமிழ்வாணன் அவரது மனைவி தாமரைசெல்வி, மகள்கள் அபர்ணா, கோபிகா ஆகியோர் வீட்டுக்குள் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அவரது கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த தமிழ்வாணன் குடும்பத்தினர் வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருமருகல் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் திலக்பாபு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த பணம், டி.வி, மின்விசிறி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் சதீஸ், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், ஊராட்சி செயலர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி ரூ.5 ஆயிரம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்