ஓட்டு வீடு மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி சாவு

அரக்கோணம் அருகே ஓட்டு வீடு மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.

Update: 2022-06-22 12:48 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்தசில நாட்களாக மழை பெய்து வருகிறது. அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை கிராமத்தில் பெய்த மழையால் பள்ளிக்கூடமேட்டு தெருவைச் சார்ந்த அலமேலு (வயது 90) என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அரக்கோணம் தாலுகா போலீசுக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தாசில்தார் பழனிராஜன் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து இடிபாடிகளில் சிக்கி உயிரிழந்த மூதாட்டியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த மூதாட்டிக்கு மனோகரன் (65) என்ற மகன் உள்ளார். அவர், ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவார். அவர், தற்போது சென்னையில் உள்ளார். அலமேலு மட்டும் தனியாக கிராமத்தில் வசித்து வந்தார். மனோகரன் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து தாயார் அலமேலுவை பார்த்து விட்டு செல்வார்.

இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்