ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா முடச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஐவேந்திரன் (வயது 26). அதே கிராமத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் மகள் ஆர்த்தி (23). இவர்கள் இருவரும் காதலித்து புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து காதல் ேஜாடி இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்று தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி இருவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். பெண்ணின் குடும்பத்தினர் அவர்களை ஏற்று கொள்ளவில்லை. இதையடுத்து ஐவேந்திரன் குடும்பத்தினர் அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.