கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

Update: 2022-06-11 21:29 GMT

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் ஊராட்சி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் விஜய் (வயது 23). நெல் அறுவடை எந்திர டிரைவர். பைத்தூர் வள்ளி நகர் பகுதியை சேர்ந்த சாமி மகள் பிரியா (20). இவர் மணிவிழுந்தான் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய், பிரியா ஆகியோர் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஆத்தூர் வட சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து இருவீட்டாரையும் அழைத்து பேசி போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்