காங்கிரீட் போட்டு சிறிது நேரத்தில் சேதமடைந்த சாலை

மார்த்தாண்டத்தில் காங்கிரீட் போட்டு சிறிது நேரத்தில் சேதமடைந்த சாலை

Update: 2023-07-13 18:45 GMT

குழித்துறை, 

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் பகுதியில் குடிநீர் திட்டத்துக்காக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. இவ்வாறு தோண்டப்பட்ட சாலை உடனடியாக சீரமைக்காததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலைைய சீரமைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் பலகட்ட போராட்டங்கள் நடத்திய பின்பு தற்போது நெடுஞ்சாலை துறையினர் சாலைைய சீரமைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியிலும் பழைய தியேட்டர் சந்திப்பு பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு சாலையில் உள்ள பள்ளங்களில் காங்கிரீட் போட்டு சீரமைப்பு பணி நடந்தது. இதற்காக மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. பெரும்பாலான வாகனங்கள் மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன.

மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் போடப்பட்ட காங்கிரீட்டை சுற்றிலும் போக்குவரத்து போலீசார் தடுப்பு வேலிகள் வைத்ததால் சேதமடையாமல் பாதுகாக்கப்பட்டது. ஆனால் பழைய தியேட்டர் சந்திப்பில் சீரமைக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு லாரி சென்றதால் சாலையில் காங்கிரீட்டில் பள்ளம் ஏற்பட்டு சேதமாகி உள்ளது. இதையடுத்து மேலும் சேதமாகாமல் இருக்க காங்கிரீட் மீது குடிநீர் குழாயை தூக்கி வைத்துள்ளனர். காங்கிரீட் போட்ட உடனே தடுப்பு வேலி வைத்து பாதுகாத்து இருந்தால் இவ்வாறு சேதமாகி இருக்காது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்