கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 22,688 கன அடியாக அதிகரிப்பு.!
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 22,688 ஆக அதிகரித்துள்ளது.
பிலிகுண்டுலு,
தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, கபினிக்கு 25 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணைக்கு 48 ஆயிரம் கன அடி நீரும் வந்துகொண்டிருக்கிறது.
அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக, கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இரு அணைகளிலிருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. சனிக்கிழமை மாலை திறக்கப்பட்ட இந்த தண்ணீரானது, இன்று பிற்பகலில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை அடைந்தது.
இந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 22,688 ஆக அதிகரித்துள்ளது. கே.ஏர்.எஸ். அணையில் இருந்து 2,688 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 20,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.