கிருஷ்ணகிரியில் பலத்த மழை

கிருஷ்ணகிரியில் நேற்று மாலை பெய்த பலத்த மழையால் சாலைகள் வெள்ளக்காடானது.

Update: 2022-12-12 18:45 GMT

கிருஷ்ணகிரியில் நேற்று மாலை பெய்த பலத்த மழையால் சாலைகள் வெள்ளக்காடானது.

பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக விடாமல் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை வெயில் காணப்பட்டது. மாலை 3 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் விடாமல் மழை கொட்டித்தீர்த்தது.

அதே போல நேற்று இரவும் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகள் வெள்ளக்காடானது. குறிப்பாக கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையத்தில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

மக்கள் அவதி

பஸ் நிலையத்திற்குள் வந்த டவுன் பஸ்கள் அனைத்தும் ஊர்ந்தபடியே சென்றன. இதேபோல சென்னை சாலை, பெங்களூரு சாலை என பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்