தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி கைது

தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-25 18:15 GMT

கீரனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 47). தொழிலாளி. இவர் இன்று இரவு வேலை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் சுப்பிரமணியனை வழிமறித்து நான் பெரிய ரவுடி உன் பாக்கெட்டில் உள்ள பணத்தை கொடு என கூறி மிரட்டியுள்ளார். பின்னர் அவர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.1,200-ஐ பறித்துகொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து, களமாவூரைச் சேர்ந்த ரவுடி சேகர் (53) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்