வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு பிடிபட்டது
வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு பிடிபட்டது.
அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் அப்பாஸ்மந்திரி (வயது 35). இவருக்கு சொந்தமான வீட்டிற்குள் சாரைப்பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதுகுறித்து அவர் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சிறிது நேர போராட்டத்திற்கு பின்பு 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.