தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.

Update: 2022-08-16 05:23 GMT

சென்னை,

உக்ரைன் - ரஷியா போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 304 குறைந்து, ரூ.39,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 38 குறைந்து ரூ.4,876-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல வெள்ளியின் விலை கிராமுக்கும் ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.63.80க்கும் , கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.63,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்