ஒதியம் கிராமத்தில் தாழ்வாக தொங்கிய மின்கம்பிகள் சரி செய்யப்பட்டன

மின்சாரம் தாக்கி டிரைவர் பலியானை தொடர்ந்து ஒதியம் கிராமத்தில் தாழ்வாக தொங்கிய மின்கம்பிகள் சரி செய்யப்பட்டன.

Update: 2022-06-18 18:55 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் நேற்று முன்தினம் செங்கல் ரோடு ஏற்றிச்சென்ற லாரி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் டிரைவர் ஆனந்தராஜ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து, ஒதியம் கிராமத்தில் மேற்கு தெரு மற்றும் ஏரிக்கரையிலிருந்து மருவத்தூர் செல்லும் சாலை, மூங்கில்பாடி சாலையில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள், தாழ்வாக தொங்கிய மின்சார கம்பிகளை பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச் செல்வன், பெரம்பலூர் நகர மின்வாரிய உதவி பொறியாளர் (பொறுப்பு) சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்