புதர் சூழ்ந்த குளத்தை சீரமைக்க வேண்டும்

புதர் சூழ்ந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்தனர்.;

Update:2022-10-26 00:15 IST

பந்தலூர், 

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மலப்பொட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் சளிவயல், அத்திச்சால், கொளப்பள்ளி, டேன்டீ ரேஞ்ச் எண்.3 உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மலப்பொட்டுவில் உள்ள பெரிய குளத்தில் குளிப்பது, துணிகள் துவைப்பது போன்ற அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே குளத்தில் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியாமல் அவதி அடைகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மலப்பொட்டு கிராமத்தில் உள்ள பெரிய குளம் புதர் மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி வருகிறது. மேலும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, பெரிய குளத்தில் உள்ள புதர்களை அகற்றுவதோடு, குளத்தை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆழப்படுத்த வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்