வீட்டில் வெடிப்பொருட்களை பதுக்கியவர் கைது
உத்தமபாளையம் அருகே வீட்டில் வெடிப்பொருட்களை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.;
உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் புழக்கம் அதிகம் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராயப்பன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் போலீசார், அணைப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென்று நேற்று சோதனை நடத்தினர் அப்போது வெடிப்பொருட்களான டெட்டனேட்டர்கள், மற்றும் திரி ஆகியவை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் நேரு (வயது 54) என்பவரை கைது செய்தனர். அவரிடம், வெடிப்பொருட்கள் எதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமைறைவாக உள்ள அவரது மகன் கவுதமை போலீசார் தேடி வருகின்றனர்.