மின்மோட்டார் திருடியவர் கைது

கல்லிடைக்குறிச்சி அருகே மின்மோட்டார் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-27 21:40 GMT

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). இவருக்கு சொந்தமாக தெற்கு கரம்பை, கழுவன்திரட்டிற்கு அருகே தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று அந்த தோட்டத்தில் இருந்த நீர்மூழ்கி மோட்டார் திருட்டு போனது. இதுகுறித்து அவர் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் மூலச்சி வடக்கு தெருவை சேர்ந்த அருண்குமார் (27) என்பவர் நீர்மூழ்கி மோட்டாரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அருண்குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மோட்டாரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்